புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டி கோரிக்கை

புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-08-29 08:12 GMT
அச்சிறுபாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு ஊராட்சியில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், முதியோர் சிரமப்பட்டு வருகின்றனர்.சிரமத்தை போக்க, கழிப்பறை கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2022-ம் ஆண்டு, 5.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொது கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த புதிய கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News