கந்தர்வகோட்டை அடுத்த நாயக்கர்பட்டியிலிருந்து கோவில்பட்டிக்கு வீமராசு (70) பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாயக்கர்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.