தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

இருமத்தூரில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு;

Update: 2025-08-29 12:48 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருமத்தூரில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகளை இன்று முதல் பாதுகாப்பாக கரைக்க அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வாகனங்களை போலீசார் கண்காணித்து ஆற்றுக்குள் அனுமதித்தனர். பக்தர்கள் பொதுமக்கள் என இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் வைத்து கற்பூர தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தி கரைத்தனர். தருமபுரி கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்தனர்.

Similar News