பள்ளி வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
பள்ளி வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வேங்கடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கண்டிகை அரசினர் மேல்நிலைப்பள்ளியில்,நபார்டு நிதியில் 1 கோடியே 97 இலட்ச மதிப்பீட்டு புதிய 9 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்கலந்து கொண்டு இன்று( 29.8.2025 )பணியினை தொடக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் உடன் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன், ஒன்றிய குழு துணைத்தலைவர் AVM.இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்யாணி இரவி, லட்சுமணன், செல்வசுந்தரி இராஜேந்திரன், துணைத்தலைவர் ஹேமாமாலினி வாசு, வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.