ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி புல்வெளி மைதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்....*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி புல்வெளி மைதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்....*;

Update: 2025-08-29 15:38 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி புல்வெளி மைதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.... தற்பொழுது கிரிக்கெட் மற்றும் கால்பந்து புல்வெளி மைதானம் என்பது தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது.பெரும்பாலான இடங்களில் இது போன்ற மைதானங்கள் திறக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் யுனி 360 டிகிரி கால்பந்து மற்றும் கிரிக்கெட் புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். பின்பு அந்த மைதானத்தில் ராஜேந்திரபாலாஜி கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாடி அப்பகுதியில் இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News