ஊர்வலப் பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட மின் பணியாளர்கள்
மதுரையில் விநாயகர் ஊர்வல பாதையில் மின் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்;
மதுரையில் இன்று மாலை விளக்குத்தூண் பகுதியிலிருந்து சுமார் 190 விநாயகர் சிலைகள் மாசி வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது மின் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், மின் விபத்தை தவிர்க்கவும் உதவி மின் செயற்பொறியாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் 7 உதவி பொறியாளர்கள் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் ஊர்வலப் பகுதியில் ஆங்காங்கே இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.