தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை பகுதி செயலாளர் வழக்கறிஞர் யாசிர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் கலந்து கொண்டு உணவு பரிமாறி சிறப்பித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.