திருமயம் நுகர் பொருள் வாணிப கிடங்கு எதிரே கல்லூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் மீது புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கல்லூரை சேர்ந்த ஜீவகுமாரும் சிவகங்கையை சேர்ந்த கோபால், கிருஷ்ணராஜ் மற்றும் வனிதா என்ற பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.