செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு இடங்களில் ஆய்வு
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் பல்வேறு இடங்களில் ஆய்வு;
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வண்டலூர் ஊராட்சியில் உள்ள பாலாஜி நகர் பிரதான சாலை ,வில்லியம் பள்ளி சாலை ,இடுகாடு சாலை, மற்றும் ஓட்டேரி விரிவு பகுதி ,செந்தில் நகர், டி. எஸ். நகர், முரசொலி நகர் ,சமுதாய கூடம் ,மற்றும் நியாயவிலை கடைகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். உடனே காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஏ.வி.எம். இளங்கோவன்,ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள்,ஒன்றிய கவுன்சிலர்,கிளைச் செயலாளர், கழகப் பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் உடனிருந்தனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி,அவர்களிடம் புதிய சாலைகள் போடுவதற்கும்,பழுதடைந்து சாலைகள், சீரமைப்பது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்.