கடமலைக்குண்டு காவல் துறையினர் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஜெகஜோதி என்பவர் நின்று கொண்டு போவோர் வருவோரை பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார். காவல்துறையினர் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் ஜெகஜோதி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.