நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
அரியலூர், ஆக.30 - அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முகாமை, ஆட்சியர் பொ.ரத்தினசாமி பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 திருமண உதவிதொகை,1 பயனாளிக்கு ரூ.1,200 ஓய்வூதிய உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முகாமுக்கு வருகைபுரிந்த 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கி, நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து, துணை இயக்குநர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :