அர்த்தநாரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அர்த்தநாரிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்;

Update: 2025-08-30 15:31 GMT
காங்கேயம் அருகே அர்த்தநாரிபாளையத்தில் மகாகணபதி, மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன்,கன்னிமார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செல்வகணபதி, மாகாளியம்மன், பட்டத்தரசி அம்மன், கன்னிமார், கருப்பணசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.எஸ்.என். நடராஜ், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் முருகவேல், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வெங்கடேஷ சுதர்சன், ஒன்றிய துணைச் செயலாளர் திருச்செந்தில் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News