நெல்லையப்பர் கோவிலுக்கு பரம்பரை வழிமுறை சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கோயிலிலோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி அலுவலகத்திலோ பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, அஞ்சலிலோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ வருகின்ற 30.09.2025 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.