பயனாளிகளுக்கு பாஸ்புக் வழங்கும் நிகழ்ச்சி

வள்ளியூர் தெற்கு ஒன்றிய பாஜக;

Update: 2025-08-31 02:36 GMT
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில் பிரதமரின் செல்வமகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான பாஸ்புக்கை வள்ளியூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நேற்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட பாஜக துணை தலைவர் பண்ணை பாலகிருஷ்ணன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார், துணைத்தலைவர் ஜெகன், மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் பொன்துரை மற்றும் தபால் அலுவலக அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Similar News