ராமநாதபுரம் எஸ்பிபி கட்சியின் சார்பில் சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அனைத்து சமூதாக மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
ராமநாதபுரம்உச்சிப்புளி அருகே இருமேனி கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் அனைத்து சமூதாக மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நவ்வர்ஷா தலைமை வகித்தார்.கிளைத்தலைவர் அஹமது சரிபுகான் வரவேற்றார். கிழக்கு மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் துவக்கவுரைற்றினார். மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு அனைத்து சமூதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். கீழக்கரையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் எஸ்.டி.பி.ஐ கட்சியில் இணைந்தனர். இக்கூட்டத்தில், நிர்வாகிகள் முகம்மது சுலைமான்,அப்துலஜமீல்,ஜெமீலுநிஷா,சுல்தான் பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மண்டபம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கசுபர் சாதிக் நன்றி கூறினார்.