எலியார்பத்தியில் சுங்க கட்டணம் உயர்வு

மதுரை அருகே எலியார்பத்தியில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது;

Update: 2025-08-31 06:38 GMT
மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது . அதனடிப்படையில் கார்,வேன்,ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்று வர பழைய கட்டணம் 90 ரூபாயிலிருந்து 95 ரூபாயாகவும், இரு முறை சென்று வர 135 ரூபாயிலிருந்து140 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2720 இல் இருந்து 2785 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News