இறந்து கிடக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை

மதுரை சோழவந்தானில் இறந்து கிடக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2025-08-31 06:39 GMT
மதுரை சோழவந்தான் வைகை ஆற்று பாலம் நடுவில் தெரு நாய் ஒன்று இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை .இதே போன்று காமராஜர் சிலை அருகில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடக்கும் தெரு நாய் வயிறு உப்பி துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது . இது போல் நகரில் பல இடங்களில் இறந்து கிடக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News