நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் 46வது வார்டு சார்பாக மாபெரும் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் மேலப்பாளையம் நூருல் ஆர்பீன் தர்கா வளாகத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. முகாமினை மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி துவங்கி வைத்தார்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் மாவட்ட தலைவர் கனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.