நெல்லையை சேர்ந்த ரசியா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவர் மூளை சாவு அடைந்ததை தொடர்ந்து இவரது உடல் உறுப்புகள் இன்று தானம் செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மருத்துவத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.