காரியாபட்டி அருகே இராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ-வின் கார் - டூவிலர் மீது மோதி விபத்து - டூவீலரில் சென்ற நில தரகர் பரிதாபமாக உயிரிழப்பு*

காரியாபட்டி அருகே இராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ-வின் கார் - டூவிலர் மீது மோதி விபத்து - டூவீலரில் சென்ற நில தரகர் பரிதாபமாக உயிரிழப்பு*;

Update: 2025-08-31 14:19 GMT
காரியாபட்டி அருகே இராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ-வின் கார் - டூவிலர் மீது மோதி விபத்து - டூவீலரில் சென்ற நில தரகர் பரிதாபமாக உயிரிழப்பு காரில் பயணித்த எம்.எல்.ஏ குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஅழகிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் நில தரகர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் காரியாபட்டிக்கு டூவிலரில் வந்த லட்சுமணன் தனது வேலையை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது காரியாபட்டி அருகே கே.கரிசல்குளம் விலக்கு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து கமுதியில் நாளை நடைபெறும் இராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவரது தந்தையின் 14 ஆம் ஆண்டு நினைவு தினத்திற்கு செல்வதற்காக எம்.எல்.ஏ - வின் காரில் எம் எல் ஏ மனைவி மற்றும் குடும்பத்தினரை டிரைவர் மணிகண்டன் என்பவர் அழைத்து சென்ற இனோவா கார் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழஅழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியதில் லட்சுமணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். அவரது உடலை காரியாபட்டி போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ பயணம் செய்யும் காரில் எம்.எல்.ஏ இல்லாமல் அவரது குடும்பத்தினர் சென்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் நில தரகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News