ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் காவல் துறையினர் இடையே வாக்குவாதம்., இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் காவல் துறையினர் இடையே வாக்குவாதம்., இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினர்., இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி..*;

Update: 2025-08-31 14:25 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் காவல் துறையினர் இடையே வாக்குவாதம்., இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினர்., இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் அதிமுக, பாஜக,இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்யப்பட்டு மாலை 7 மணிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதில் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மசூதி அருகே 9.30 மணிக்கு வந்த போது மேளதாளங்கள் முழங்கக் கூடாது என்று காவல்துறையினர் ஊர்வலக்காரர்களிடம் கராராக பேசியதாக கூறப்படுகிறது இந்நிலையில் தாங்கள் அமைதியான முறையில் விநாயகர் சிலையை எடுத்து செல்வதாகவும் பல ஆண்டுகளாக மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலையை இந்த வழியாக எடுத்துச் செல்வதாக முறையிட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கும் ஊர்வலக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் யுவராஜ் மற்றும் பொருளாளர் வினோத்குமரன் இருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகளை தாக்கியதாக சிவகாசி டிஎஸ்பி பாஸ்கரன், மற்றும் பெயர் தெரியாத 30 நபர்களான காவல்துறையினர் மீது புகார் கொடுக்கப்பட உள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக ஊர்வல காரர்களை தாக்கியதும் இந்து முன்னணியினரை தாக்கியதும் அராஜகபோக்கில் ஈடுபட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News