கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்த வேண்டும் என்று கூறியதால் ,  பட்டா வழங்க கோரி  மனு

குமாரபாளையத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்த வேண்டும் என்று கூறியதால் , குடியிருப்போர் சார்பில் பட்டா;

Update: 2025-08-31 15:02 GMT
குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் உள்ள அப்புராயர் சத்திரத்திற்கு உட்பட்ட இடங்களில் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு 95 ஆண்டுகளுக்கும் மேலாக , கட்டிடங்கள் கட்டப்பட்டு வசித்து வருகிறார்கள். முன்னோர்கள் அனைவரும் உயிருடன் இருந்த வரை 1998 வரை நில வாடகை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒவ்வொரு வீட்டிலும் வாரிசுகள் தான் உள்ளனர். 2021 வரை எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் இருந்தது. தற்போது லட்சுமி நாராயண சுவாமி கோவில் நிர்வாகத்தினர், இந்த இடம் இந்த கோவிலுக்கு சொந்தம். ஆகவே மாத வாடகை செலுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது குறித்து இப்பகுதியில் குடியிருப்போர் கூறியதாவது: இந்த இடம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்பது சம்பந்தமாக 1998 க்கு முன்பு எவ்வித ஆவணமும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இல்லை. இருப்பினும் கோவில் நிர்வாகத்தினர் வாடகை செலுத்த வேண்டும் என்பது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பட்ட வழங்க ஆவண செய்ய வேண்டும், என்று கூறினார்கள். இது குறித்த மனு ஒன்றினை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடியிருப்போர் சார்பில் கொடுக்கப்பட்டது.

Similar News