அனைத்து வணிகர்கள் சங்க விழா , மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

குமாரபாளையத்தில் அனைத்து வணிகர்கள் சங்க விழா நடந்தது. இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார்.;

Update: 2025-08-31 15:14 GMT
குமாரபாளையத்தில் அனைத்து வணிகர்கள் சங்க விழா நடந்தது. சங்க தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். இதில் அவர் கூறியதாவது:,குமாரபாளையம் சங்கத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துள்ளோம். கார்பொரெட் கம்பெனிகளுக்கு உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயம் செய்து கொடுத்து கொண்டுள்ளார்கள். சிங்கள் விண்டோ கடைகள் ஒட்டு மொத்தமாக காலி செய்யும் ஆபத்து நெருங்கிக்கொண்டுள்ளது. உற்பத்தியாளர்கள் விலைவாசியை சமநிலையை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் வணிகர் சங்க பேரமைப்பு போராட துவங்கியுள்ளது. இந்த போராட்டம் துவக்கம். ஒவ்வொரு கார்பொரேட் கம்பெனியினர் விலையை குறைத்து விற்கிறோம் என்று மாய வலை விரித்து,மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து, சாமானிய வணிகர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் திரும்பி வந்ததும் அவர் வசம் கோரிக்கை வைக்க உள்ளோம். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் வசம் வருகிற செப். 7ல் டெல்லியில், சந்தித்து, 21 கோடி பேர் சில்லறை வணிகர்கள் வாழ்வாதாரம் காப்பாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை வைக்க உள்ளோம்.50 சதவீத வரி உயர்வால், இங்கிருந்து அனுப்பப்படும் சரக்குகள் பாதி வழியில் நிறுத்தப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி விலை மதிப்புள்ள மீன்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. ஈரோடு, திருப்பூர் பகுதியயை சேர்ந்த ஜவுளித்துறையை சேர்ந்தவர்கள் மிகவும் நலியத்தொடங்கியுள்ளனர். அமெரிக்கா அதிபரின் தான் தோன்றி தனத்தை கட்டுப்படுத்த அந்த நாட்டு நீதிமன்றமே கையில் எடுத்துள்ளது.குமாரபாளையத்தில் சாயப்பட்டறை பிரச்சனை கடுமையாக உள்ளது இதற்கு தீர்வாக சுத்திகரிப்பு நிலையத்தை தமிழக அரசே அமைத்து, சாயப்பட்டறை தொழிலை பாதுகாக்க வேண்டும். டி மார்ட், ஆன் லைன் வர்த்தகம் போன்ற கார்பொரேட் நிறுவனங்களை எதிர்த்து போராட துவங்கியுள்ளோம். டி. மார்ட் போன்ற கார்பொரேட் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்கள் 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்து உள்ளார்கள். இதற்கு காரணம் எங்கள் வணிகர் சங்க போராட்ட அறிவிப்பு தான். பாரத பிரதமர் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும், உள் நாட்டு பொருட்களை வாங்க வேண்டும், உள்நாட்டு வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார். உள்ளூர் வணிகர்களை பாதுக்காக்க வேண்டும் மும்பை போன்ற நகரில் வாழும் டி.மார்ட் போன்ற நிறுவன அதிபர்கள் கடை விரிப்பார்களேயானால், இங்குள்ள 21 கோடி சில்லறை வணிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஜி .எஸ்.டி. வரி சலுகையை தீபாவளி பரிசாக பாரத பிரதமர் கொடுத்தார்கள். மகிழ்ச்சி. செப். 5 தேதிக்கு மேல் டெல்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்து, சட்ட விதிகளை எளிமை படுத்த கேட்க உள்ளோம். சட்ட விதிகளை வைத்துகொண்டு, தீய அதிகாரிகள் சிலர் வியாபாரிகளிடம் பணம் பறித்துக்கொண்டு உள்ளார்கள். மத்திய அரசின் வணிகர் நல வாரியம் பணிகள் கிடப்பில் உள்ளது. அதனை நினைவு படுத்தி செயல்படுத்த பல அமைச்சர்கள் வசம் கேட்டுக்கொள்ள உள்ளோம். ஜோமொட்டோ போன்ற நிறுவனங்கள் போல, உள்ளூரில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வியாபாரம் செய்து வருகிறார்கள். உள்ளூரில் அமைப்புக்கள் ஏற்படுத்தி, உள்ளூர் வணிகர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுவதை வரவேற்கிறோம். வெளிமாநில நபர்கள் இங்கு வந்து, நமது வணிகர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது நாங்கள் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், சங்க செயலர் பிரகாஷ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News