கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அவலம்
கழிவுநீர் கால்வாயில் உடைப்பு;
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை முழுவதும் செல்கின்றது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியில் இவ்வாறு அவலம் ஏற்பட்டுள்ளதால் இதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.