நெல்லையிலிருந்து தெற்கு செழியநல்லூர் நோக்கி இன்று காலை சென்ற அரசு பேருந்து மானூர் அருகே ஆளவந்தான் குளம் பகுதியை அடைந்த பொழுது திடீரென சாலையின் நடுவே மாடு குறுக்கே வந்ததை தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் ராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.