கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் தற்கொலை
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் தற்கொலை!;
கோவில்பட்டியில் பொறியியல் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 4ஆவது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராகவேந்திரா (34). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாராம். நேற்று முன்தினம், அவர் வீட்டின் குளியலறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாராம். அவரது தாய் அப்பகுதியினரின் உதவியுடன் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினராம். கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.