பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்களும் (எண்ணம்-2) மற்றும் அலைபேசி சமிக்சை அல்லாத பகுதிகளில் பயன்படுத்தத் தக்க வாக்கி டாக்கிகளும் (எண்ணம்-6 ஜோடிகள்) என மொத்தம் ரூ.17 இலட்சம் மதிப்பில் 17 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் செய்யப்பட்டுள்ள பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்.