மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-09-01 11:40 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், வடக்குநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்த (லேட்) திருமதி எம்.சுகுமாரி என்பவர் பணிக்காலத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் வாரிசுதாரரான மகள் திருமதி மு.தமிழரசி என்பவருக்கு திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும், பின்னர், இராஜபாளையம் வட்டம், சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.ஆனந்தகுமார் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான தாயார் திருமதி சமுத்திரம் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையினையும், இராஜபாளையம் வட்டம், மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) திரு.கருப்பசாமி என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி குருவம்மாள் என்பவருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவினையும், காரியாபட்டி வட்டம், கீழத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த (லேட்)திரு.ராஜேந்திரன் என்பவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அவரது வாரிசுதாரரான திருமதி உடையக்காள் என்பவருக்கு ஓய்வூதியமும் மற்றொரு வாரிசுதாரரான திரு. துரைசாமி என்பவருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வழங்கினார்.

Similar News