விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பா

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் பேட்டி;

Update: 2025-09-01 11:43 GMT
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் வசிக்கும் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என மற்றும் 24 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தினசரி 14 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுப்பதற்காக ரூ. 3.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 30 கிலோமீட்டர் தூரத்திற்கு, 229 மின் கம்பங்கள் மற்றும் 13 மின் மாற்றிகள் மூலம் தனி மின்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 23 மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் 11 கேவி திறன் கொண்ட மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சேத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மும்முனை மின்சாரத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நக்கனேரி ஊரின் வடக்கே அமைந்துள்ள ஆற்றின் நடுவே ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் மற்றும் தென்காசி தொகுதி எம்பி ராணி ஸ்ரீகுமார் எம்எல்ஏ தங்கபாண்டியன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். அடுத்ததாக தென்காசி - சங்கரன்கோயில் சாலையை இணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரூ. 30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இணைப்பு சாலை பணிகளை அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுக்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Similar News