பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக மின்வாரியத் துறைக்கு மாற்றுத்திறனாளி புகார் மனு கொடுத்த நிலையில் மாற்றுத்திறனாளி இடம் பணம் கேட்ட திமுக அரசின் அவல நிலை..,*;

Update: 2025-09-01 11:44 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக மின்வாரியத் துறைக்கு மாற்றுத்திறனாளி புகார் மனு கொடுத்த நிலையில் மாற்றுத்திறனாளி இடம் பணம் கேட்ட திமுக அரசின் அவல நிலை.., விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் கே. புதூர் கிராம பகுதி அமைந்துள்ளது.இந்த கிராம பகுதியில் சுமார் 900 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கே. புதூர் பேருந்து நிறுத்த பகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது இந்த ட்ரான்ஸ்பார்மர் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மின் கம்பிகள் தாழ்வான பகுதியை நோக்கி செல்வதாகவும் இதில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகள் டிரான்ஸ்பார்மர் அருகே ஒட்டி திரும்புவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நல் வாய்பாக பயணிகள் உயிருக்கு எந்த ஒரு ஆபத்து ஏற்படாமல் இருந்ததாகவும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீப்பொறிகள் பரப்பதாகவும் பகுதியை கடந்து செல்ல அச்சத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரியத்துறையிடம் பொதுமக்கள் சார்பில் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற புகார் அளித்தும் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த தனசேகரன் என்ற மாற்றுத்திறனாளி மின்வாரிய துறைக்கு டிரான்ஸ்பார்மர் மாற்ற மனு கொடுத்த நிலையில் மனுதாரர் டிரான்ஸ்பார்மரை மாற்றுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பதில் மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாற்றுத் திறனாளி இடம் மின்வாரியத்துறை பணம் கேட்ட சம்பவம் ஸ்டாலின் அரசின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது என பொதுமக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளது. உடனடியாக கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : ஜெயசந்திரபாண்டியன் ( ஊர் பொதுமக்கள் )

Similar News