பரிவட்டம் கட்டுவதில் தகராறு.,முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒலிபெருக்கியை உடைத்து ஆதரவாளர்களுடன் தகரறில் ஈடுபட்டதாக கிராம மக்கள் புகார்

பரிவட்டம் கட்டுவதில் தகராறு.,முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒலிபெருக்கியை உடைத்து ஆதரவாளர்களுடன் தகரறில் ஈடுபட்டதாக கிராம மக்கள் புகார்;

Update: 2025-09-01 11:45 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதில் தகராறு.,முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒலிபெருக்கியை உடைத்து ஆதரவாளர்களுடன் தகரறில் ஈடுபட்டதாக கிராம மக்கள் புகார் .,சிசிடிவி ஆதாரங்களை காவல்துறையிடம் கொடுத்தும் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு., காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைத்திலிங்கபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த சுமார் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரிடமும் நன்கொடை வசூலித்து காளிஅம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளனர் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா தற்போது நடைபெற்று வருகிறது இந்த கோவிலில் சுமார் 20 ஆண்டுகளாக ஜெயக்கொடி என்பவர் ஊர் நாட்டாமையாக இருந்து வந்ததாகவும் அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு வந்ததாகவும் தற்போது முருகன் என்பவர் ஊர் நாட்டாமையாக இருப்பதாகவும் அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பரிவட்டம் கட்டப்பட உள்ளதாக இருந்த நிலையில் ஜெயக்கொடி என்பவரின் மகன் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் என்பவர் பரிவட்டம் தங்கள் குடும்பத்தினருக்கு தான் கட்ட வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கும் வாக்குவாதம் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கபாண்டி என்பவர் கோவில் விழாவில் ஒலிபெருக்கியில் கேலி கிண்டலாக கொண்ட பாடல் ஒலித்ததாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்து ஒலிபெருக்கியை அடித்து உடைத்துள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்களை வைத்து ஊர் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது அதன் சிசிடிவி காட்சிகள் வைத்து வன்னியம்பட்டி காவல்துறையினரிடம் வைத்திலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயக்கொடி அவரது மகன் தங்கப்பாண்டியன் தரப்பிலிருந்து ஊர் பொதுமக்கள் தங்களை தகாத வார்த்தைகள் பேசியதாகவும் கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகுந்த ஆதாரங்களை ஊர் பொதுமக்கள் சார்பில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு ஊர் பொதுமக்கள் 13 பேர் மீதும் ,ஜெயக்கொடி தங்கபாண்டியன் உள்ளிட்ட 13 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும், வைத்திலிங்கபுரம் பகுதியில் அதிகமான கஞ்சா பழக்கங்கள் விற்பணைகள் இருந்து வந்த நிலையில் அதை தடுப்பதற்காக ஊர் பொதுமக்கள் இதற்கு முன்னாள் இருந்த வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் என்பவருக்கு உதவி புரிந்ததால் அதன் கால்புணர்ச்சி காரணமாக தற்போது ஊர் பொதுமக்கள் மீது இன்னொரு தரப்பினர் புகார் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. வன்னியம்பட்டி காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு ஊர் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்தது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் திடீரென காளியம்மன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் உயர் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தங்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முன்னாள் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டி என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயியை நெஞ்சில் உதைத்து தாக்கிய விவகாரத்தில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பதும் இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டி : கண்ணாத்தாள் பேட்டி : செல்வராணி பேட்டி : முருகன் (ஊர் நாட்டாமை )

Similar News