சிவகாசியில் செண்டை மேளம் முழங்க- மேளதாளத்தோடு, வீர-தீர செயலுடன், ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம்! - சுழன்ற படி சென்ற விநாயகர் சிலை - குத்தாட்டம் போட்ட முருகன் வேடம் தரித
சிவகாசியில் செண்டை மேளம் முழங்க- மேளதாளத்தோடு, வீர-தீர செயலுடன், ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம்! - சுழன்ற படி சென்ற விநாயகர் சிலை - குத்தாட்டம் போட்ட முருகன் வேடம் தரித்த சிறுவன்....;
சிவகாசியில் செண்டை மேளம் முழங்க- மேளதாளத்தோடு, வீர-தீர செயலுடன், ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம்! - சுழன்ற படி சென்ற விநாயகர் சிலை - குத்தாட்டம் போட்ட முருகன் வேடம் தரித்த சிறுவன்.... சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் நகரின் பல்வேறுதெருக்களின் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு அன்றாடம் சிறப்பு பூஜைகளுடன், தீபாராதனை காண்பித்து, ஆன்மீக பஜனையுடன், சொற்பொழிவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய விநாயகர் ஊர்வலம் சுமார் 4 மணி நேரம் நடத்தப்பட்டு நிறைவு பெற்றது. முன்னதாக மாரியம்மன் கோவில் வெற்றி விநாயகர் ஆலயம் முன்பிருந்து ஏராளமான வாகனங்களில் விதவிதமான அலங்காரத்துடன் வீற்றிருந்த விநாயகர் சிலைகளுடன் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தொடங்கிய ஊர்வலம், செண்டை மேளம் முழங்க, மேளதாளத்துடன், வீர- தீர செயற்பாடுகளுடன், ஆட்டம் - பாட்டத்தோடு, ஆரவாரத்துடன் நகரின் ரத வீதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஓம் காளி! ஜெய் காளி !!என முழக்கமிட்டபடி சென்றனர். ஊர்வலத்தில் சுழற்றி விடப்பட்ட விநாயகர் சிலையுடன், கையில் வேலுடன் குத்தாட்டம் போட்ட முருகன் வேடம் தரித்த சிறுவனுடன், பெண்கள் கையில் விளக்கு ஏந்தியும் பங்கேற்க, விநாயகர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண் ,பெண் போலீஸார்கள் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஊர்வலம் சென்ற அனைத்து பகுதிகளும் ட்ரோன் கேமரா மூலமாக காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. நகரின் முக்கிய பல்வேறு வீதிகளின் வழியாக சென்ற விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ஜக்கம்மாள் கோவில் பின்புறம் நிறைவு பெற்றதையடுத்து, தனியாருக்குச் சொந்தமான நீர்நிலைத் தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் விநாயகர் சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்து கரைக்கப்பட்டது.