போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து

போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து;

Update: 2025-09-01 11:49 GMT
திருச்சுழி நகர்ப் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே திருச்சுழி பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முத்துகிருஷ்ணன் பணிகளை விரைவில் முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மாலை வேளையில் மின்கசிவு காரணமாக திடீரென ஸ்டுடியோவில் தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்ததுடன் தீயை போராடி அணைத்தனர். இந்த நிலையில் இந்த தீ விபத்தில் சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News