மாணவிக்கு சேர்க்கை கட்டணம் வழங்கிய கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஏர்வாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கலந்தாய்வின் மூலம் இராமையன்பட்டி கால்நடை மருத்துவமனையில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள பேச்சியம்மாள் என்ற மாணவிக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து சேர்க்கை கட்டணமாக 25,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுகுமார் மாணவியிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.