தமிழக அரசு தட்டச்சு தேர்வு
குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் அரசு தட்டச்சு தேர்வு நடந்தது.;
குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் அரசு தட்டச்சு தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது. இந்தத் தேர்வுக்கு:முதன்மை கண்காணிப்பாளராக: ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், துணை கண்காணிப்பாளராக: எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியை முத்து வேலம்மையார் ஆகியோர் பணியாற்றினர். இந்த தேர்வில் 38 தட்டச்சு பயிலகங்கள் மூலம் மாணவர்கள் பங்கேற்றனர். இளநிலை ஆங்கிலம் 732, இளநிலை தமிழ் 280, முதுநிலை ஆங்கிலம்: 290, முதுநிலை தமிழ் 189, முன் இளநிலை ஆங்கிலம் 11, முன் இளநிலை தமிழ் 1,அதிவேக தட்டச்சு தமிழ் 1, மொத்தம் ஆயிரத்து 504 தேர்வர்கள். இந்தத் தேர்வில் குமாரபாளையம், பவானி, சங்ககிரி, எடப்பாடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்,