மாநகரப் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்
மாநகரப் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், நல்லம்பாக்கம் ஊராட்சியில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாலையை சுமார் ரூ.5 கோடி மதிப்பீல் புதிய தார் சாலை அமைத்து 22 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட மாநகர பேருந்து தடம் எண் 55D மாநகர பேருந்தை சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், அரசு அதிகாரிகள்,திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.