சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு!
புதிதாக தார் சாலை அமைக்க வெட்மிக்ஸ் கலவை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.;
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 50, ராஜீவ் காந்தி 5-வது குறுக்கு தெருவில் புதிதாக தார் சாலை அமைக்க வெட்மிக்ஸ் கலவை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. இதனை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த், மாமன்ற உறுப்பினர் அருணா விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.