சாலையை கடக்க முயன்ற போதுவிபத்து ஸ்கூட்டர் மீது கார் மோதி பெண் பலி
பல்லடத்தில் சாலையை கடக்கும் முயன்ற போது விபத்து ஸ்கூட்டர் மீது கார் மோதி பெண் வலி;
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி மீனாட்சி (வயது 41). இவர் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வருவதற்காக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். பல்லடம்- தாராபுரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியே சென்ற கார் எதிர் பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.