நெல்லை மாநகர ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை மற்றும் மாநகர தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.