பானாவரத்தில் நூதன முறையில் நகை திருட்டு
பானாவரத்தில் நூதன முறையில் நகை திருட்டு;
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம், பிள்ளையார் குப்பத்தில் பாரதி என்பவரின் நகையை பாலிஷ் போடுவதாகக் கூறி, எடை குறைத்து மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பீகாரைச் சேர்ந்த ஓம்குமார் (18) மற்றும் ஒரு சிறுவன் (15) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.