திருநெல்வேலி மாநகர பேட்டை கூட்டுறவு மில் அருகே உள்ள சேரன்மகாதேவி சாலையில் இன்று (செப்டம்பர் 2) பழமை வாய்ந்த மரம் ஒன்று திடீரென உடைந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து கீழே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.