ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்த எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பஞ்சாயத்து சுத்தமல்லி ஊராட்சி செயலாளர் சுரேஷிடம் இன்று (செப்டம்பர் 2) எஸ்டிபிஐ கட்சியினர் மனு அளித்தனர். அதில் கே.எம்.ஏ. நகர் மற்றும் பர்வீன் நகர் பகுதியில் தெரு விளக்குகளை முறையாக சரி செய்ய வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதில் சுத்தமல்லி நகர தலைவர் பீர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.