திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் எந்த இடத்திலும் சாதி,மத ரீதியான வன்முறைகளுக்கு அரசு இடம் கொடுக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் நெல்லையில் ரூ.605 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறினார்.