திருப்பூர், ஜி. என் கார்டன் பகுதியில் தார் சாலை அகலப் படுத்துவதற்கான பூமி பூஜை துவக்க விழா!
திருப்பூர், ஜி. என் கார்டன் பகுதியில் தார் சாலை அகலப் படுத்துவதற்கான பூமி பூஜை துவக்க விழா நடைபெற்றது.;
திருப்பூர் ஜி என் கார்டன் பகுதியில் புதிய தார் சாலை பூமி பூஜை துவக்க விழா! திருப்பூர் மாநகராட்சி 3-அவரது மண்டலத்திற்குட்பட்ட 60வது வார்டில் புது ரோடு டி என்கே பள்ளி முதல் ஜி என் கார்டன் இறுதி வரை உள்ள தார் சாலை அகலப்படுத்துவதற்கான தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழாவினை மாநகராட்சி நிதி குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான திருமதி கோமதி குமார்,திமுக முத்தனம் பாளையம் பகுதி செயலாளர்கள் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சிவசாமி,பகுதி அவைத்தலைவர் ஜெகநாதன் மற்றும் முத்தனம் பாளையம் பகுதி கழக நிர்வாகிகள் 60 வட்டக் கழக நிர்வாகிகள்,சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.