என்ன? அழகான பரிசா எங்கே? எப்போது?

செப்டம்பர் 4 அழகான பரிசுகளுடன் ஜெயங்கொண்டத்தில் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் கோலாகல திறப்பு விழாவில் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.;

Update: 2025-09-03 03:02 GMT
அரியலூர், செப்.3 - அரியலூரின் அடையாளமாக திகழும் 60 ஆண்டு பாரம்பரிய மிக்க ஏபிஎன் ஜவுளி அண்ட் ரெடிமேட் ஷோரூம் தரமான ஜவுளிகள் குறைந்த விலையில் என்ற தாரக மந்திரத்துடன் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்கி வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரியலூரின் கைராசி நிறுவனமான அரியலூர் ஏ பி என் ஜவுளி கடலின் மற்றுமொரு புதிய அங்கமாக ஜெயங்கொண்டம் மாநகர் சிதம்பரம் சாலையில் மிக பிரம்மாண்டமாய் ஜெயங்கொண்டத்தில் அன்பைச் சொல்லும் அழகான பரிசுகளுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, லிப்ட் வசதிகளுடன் கூடிய ஜவுளி ஷோரூம் செப்டம்பர் 4 இன்று காலை 10.35 மணி முதல் ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் உதயமாகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆடவர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி பிரிவில் எண்ணற்ற டிசைன்கள் ஏராளமான கலெக்ஷன்களில் வண்ண வண்ண ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகள் மலைபோல் வந்து குவிந்துள்ளது. இது பற்றி ஏபிஎன் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸின் நிறுவனத்தார் தெரிவிக்கையில் தரமான ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ் ஆடைகளை நியாயமான விலையில் (குறைந்த விலையில்) விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

Similar News