பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

நிகழ்ச்சி;

Update: 2025-09-03 04:18 GMT
சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் ஏரியில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் வைரக்கண்ணன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் முன்னிலை வகித்தார். மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் நிலைகளில் தவறி விழுந்தவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News