திருவாரூரில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மழைக்காலம் தொடங்கும் முன்பே மின்கம்பத்தை மாற்ற வேண்டும்;
திருவாரூா் 6 வது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை மின்வாரியத்துக்கு புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.மழைக்காலம் தீவிரமடையும் நிலையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.