மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது;

Update: 2025-09-03 05:05 GMT
மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியைச் சேர்ந்த சாந்தலோனா, 45, என்பவர், கடந்த 29-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து, சாந்தலோனா அளித்த புகாரின்படி, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம், மதுராந்தகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'யமஹா எம்.டி.,' பைக்கில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்கள், சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த விக்னேஷ், 20, கொடுங்கையூரைச் சேர்ந்த அரவிந்தன், 20, எனத் தெரிந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கருங்குழி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். பின், அவர்களிடமிருந்து இரண்டு சவரன் செயினை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவர்களை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Similar News