மன்னார்குடியில் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.;

Update: 2025-09-03 06:00 GMT
கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் சான்றிதழ் மற்றும் அரசின் சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்ள வட்டங்கள் தோறும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் கிடையை ஒருங்கிணைந்த முதிநிலை நிர்ணயம் செய்திட உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும், கலைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Similar News