பருவ மழைக்காலம் தொடர்பாக ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல்லில் பருவ மழைக்காலம் தொடர்பாக ஒத்திகை பயிற்சி;
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கோட்டைகுளத்தில் திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் சார்பாக பருவ மழைக்காலம் தொடர்பாக ஒத்திகை பயிற்சி கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகை பயிற்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இந்நிகழ்வில் நகர் டிஎஸ்பி கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.